×

கெங்கவல்லி அருகே வாகன தணிக்கையில் ₹3.10 லட்சம் சிக்கியது

கெங்கவல்லி, மார்ச் 20: கெங்கவல்லி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற, ₹3.10 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல் மும்முடி டோல்கேட் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வாகன தணிக்கை ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்களின்றி ₹3 லட்சத்து 10 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக காரில் இருந்த சேலத்தைச் சேர்ந்த ஆனந்தி(41) என்பவரிடம் விசாரித்ததில், சென்னையில் கார் வாங்க நண்பரிடம் பணம் கொடுத்து வைத்திருந்தேன். கார் தேவையில்லை என்பதால், அந்த பணத்தை திருப்பி வாங்கிக் கொண்டு வருவதாக தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணம் இல்லாததால், ₹3.10 லட்சத்தை கைப்பற்றி தேர்தல் உதவி அலுவலர் வேடியப்பனிடம் ஒப்படைக்கப்பட்டது. வாகன தணிக்கையின்போது, சேலம் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகையா, கெங்கவல்லி தாசில்தார் சுந்தராஜன், வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார், தேர்தல் துணை தாசில்தார் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Vehicle quarry ,Kangavalli ,
× RELATED கெங்கவல்லியில் உரிய ஆவணமில்லாத 5 வாகனங்கள் பறிமுதல்