×

நாமகிரிப்பேட்டையில் 850 மூட்டை மஞ்சள்

₹30 லட்சத்துக்கு ஏலம்நாமகிரிப்பேட்டை,  மார்ச் 20: நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில்  850 மூட்டை மஞ்சள் ₹30 லட்சத்துக்கு ஏலம் போனது. நாமக்கல் மாவட்டம்  நாமகிரிப்பேட்டையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் ஏலம்  நடக்கிறது. நேற்றைய ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி,  மெட்டலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில்  இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்தனர். அதேபோல், ஆத்தூர், சேலம்,  ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகள்  வந்திருந்தனர். மொத்தம் 830 மஞ்சள் மூட்டை விற்பனைக்கு வந்தது.  அதில் விரலி மஞ்சள் 515 மூட்டையும், உருண்டை மஞ்சள் 190 மூட்டை, பனங்காலி  மஞ்சள் 125 மூட்டை என மொத்தம் 830 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தது. விரலி ரக  மஞ்சள் அதிகப்பட்சம் குவிண்டால் ஒன்றுக்கு ₹9,122க்கும், குறைந்தபட்சம்  ₹5,612க்கும், உருண்டை ரக மஞ்சள் அதிகப்பட்சம் ₹7,042க்கும், குறைந்தபட்சம்  ₹5,842க்கும், பனங்காலி ரக மஞ்சள் அதிகப்பட்சம் ₹15,762க்கும்,  குறைந்தபட்சம் ₹10,302க்கும் விலை போனது. மொத்தமாக 830 மூட்டை மஞ்சள் ₹30  லட்சத்துக்கு விற்பனை ஆனது.

Tags : Namagiripettai ,
× RELATED நாமகிரிப்பேட்டை அருகே பரபரப்பு...