×

நாடாளுமன்ற தேர்தல் பணி தீயணைப்பு துறையினர் விடுப்பு எடுக்க தடை

நாமக்கல், மார்ச் 20: நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் தீயணைப்பு துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் வைக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கையும் இங்கு நடப்பதால், கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் அழகர்சாமி  கூறியது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள அறைக்கு தீயணைப்பு துறையினரின் பாதுகாப்பும் கொடுக்கப்பட உள்ளது. குறிப்பாக 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்படும். நாமக்கல் மாவட்ட தீயணைப்பு துறையில் 75க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உள்ளனர். நாடளுமன்ற தேர்தலையொட்டி, மாவட்டத்தில் பணியாற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக அவசியமான விடுப்புக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என்பதால், விடுப்பில் உள்ளவர்கள் பணிக்கு திரும்ப உத்திரவிடப்பட்டுள்ளது என்றார்.

Tags : election ,fire department ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...