×

புதன்சந்தையில் மாடுகள் விலை சரிவு

சேந்தமங்கலம், மார்ச் 20: கோடை வறட்சியை சமாளிக்க முடியாததால், விவசாயிகள் அதிகளவில் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்ததால் புதன்சந்தையில் மாடுகள் விலை சரிந்தது. நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமைகளில் மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். மாடுகளை வாங்கவும், விற்கவும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வருகின்றனர். தமிழகத்தில் தற்போது, கோடை தொடங்கியுள்ள நிலையில் அதிக வறச்சி காணப்பட்டு வருகிறது. இதனால், மேய்ச்சல் நிலம் இல்லாத காரணத்தால் விவசாயிகள் தங்களது மாடுகளை  விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
கேரளாவில் இருந்து வியாபாரிகள் அதிகமாக வந்திருந்ததால் நேற்று மாட்டுச்சந்தையில் மாடுகள் விலை சரிந்தது. கடந்த வாரம் ₹15 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட இறைச்சி மாடு, நடப்பு வாரம் ₹13 ஆயிரத்திற்கும்,  ₹37 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கறவை மாடு ₹35 ஆயிரத்திற்கும், கடந்த வாரம் ₹12 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கன்றுகுட்டிகள் ₹10 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா