×

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

திருச்சி, மார்ச் 20:  திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி திருச்சி நாடளுமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதனால் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுடைய செலவு கணக்குகளை ஆய்வு செய்து, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க 2  தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அனூப்குமார் வர்மா (செல்: 93852 85664), சுதன்சு எஸ் கவுதம், (செல்: 93852 85658) சுற்றுலா மாளிகை பி பிளாக்கில் தங்கியுள்ளனர். தேர்தல் செலவின பார்வையாளர் சுதன்சு எஸ்.கவுதம் திருச்சி நாடாளுமன்றத்திற்குட்பட்ட ரங்கம் சட்டமன்ற தொகுதி, திருச்சி(மேற்கு), மற்றும் திருச்சி(கிழக்கு) சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளராகவும், அனூப்குமார் வர்மா திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, கந்தர்வக்கோட்டை(தனி) சட்டமன்ற தொகுதி, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் தொடர்பாக வேட்பாளர்களால் மேற்கொள்ளப்படும்  செலவு கணக்குகளை தணிக்கை செய்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். இத்தகவலை திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : constituency ,Trichy ,
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான...