×

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அலட்சியத்தால் 3 மாதமாக ஊதியமின்றி ஒப்பந்த ஊழியர்கள் தவிப்பு உடனடியாக வழங்கிட சம்மேளனம் வலியுறுத்தல்

திருச்சி, மார்ச் 20:  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 3 மாதம் சம்பளம் கிடைக்காமல் ஒப்பந்த ஊழியர்கள் அவதிப்பட்டு வருவதை தடுக்க உடனடியாக அவர்களுக்கு சம்பளம் வழங்கிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
 இதுகுறித்து தேசிய தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் திருச்சி மாவட்ட செயலாளர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு பிப்ரவரி மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்த ஊழியர்கள் கடந்த 3 மாத காலமாக ஊதியம் இல்லாமல் மிகுந்த பொருளாதார சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடைநிலை ஊழியர் களின் வாழ்க்கை அவலத்துக்கு உரியதாக மாறியுள்ளது. தன்னுடைய குழந்தைகளுக்கு போதிய சாப்பாடு கூட தர முடியவில்லையே என ஒப்பந்த ஊழியர்கள் கதறுகிறார்கள்.  மாத சம்பளம் குறைவானது. அந்த சம்பளமும் கிடைக்காததால் அடிப்படை விஷயமான உணவுக்கு திண்டாட்டம் என்கின்ற வரிய நிலையில் ஒப்பந்த ஊழியர்களின் வாழ்க்கை உள்ளது. எங்களால் முடிந்த வரை நாங்கள் எங்கள் பணிகளை சிறப்பாக செய்கிறோம். ஆனால் அற்கான ஊதியம் மட்டும் வந்து சேரவில்லை என்றால், எங்களால் எப்படி வாழ்க்கை நடத்த முடியும். பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களின் உண்மையான நிலைமை இதுதான். மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தேவையான நிதி உதவிகளை உடனே செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும் என ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்க விடுத்துள்ளனர்.

Tags : BSNL ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...