×

25000 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி உதவிஇயக்குநர் தகவல்

திருத்துறைப்பூண்டி, மார்ச்20: திருத்துறைப்பூண்டி பகுதியில் 25ஆயிரம் கால்நடைகளுக்கு  கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என உதவி இயக்குனர் ஜான்சன் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் 16வது சுற்று கோமாரி நோய்தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை கால்நடை பராமரிப்பு துறை மன்னார்குடி கோட்ட உதவிஇயக்குநர் ஜான்சன் சார்லஸ் நேற்று திருத்துறைப்பூண்டி பகுதியில் வல்லம், ஆலத்தம்பாடி, கொத்தமங்களம், திருத்துறைப்பூண்டி டவுன் ஆகியஇடங்களில் நடைபெற்ற முகாமை ஆய்வு செய்து பின்னர் நிருபர்களிடம் உதவிஇயக்குநர் ஜான்சன் சார்லஸ்கூறியதாவது: ஆண்டுக்கு இருமுறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கால்நடைகளுக்கு கோமாரிதடுப்பூசிஇலவசமாக போடப்படுகிறது. கால்நடை வளர்ப்போர் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி பலனடையலாம். கோமாரி தடுப்பூசி போடவேண்டிய 1,20,245ல் இதுவரை 25,050 தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.  மன்னார்குடி கோட்டம் 5 ஊராட்சி ஒன்றியங்களில் 33 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 3 கால்நடை மருத்துவமனைகளுக்குட்பட்ட கிராமங்கள்மற்றும் குக்கிராமங்களில் 16வது சுற்று கோமாரி நோய்தடுப்பூசி முகாம் கடந்த 15ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம்தேதிவரை 21 நாட்கள் நடைபெறுகிறது. முகாமில் பசு, எருமை, கன்றுகளுக்கு கோமாரி நோய்தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

இதற்கென கால்நடைஉதவி மருத்துவர் தலைமையில் கால்நடைஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழு காலை 6 மணி முதல் 9 மணிவரை தடுப்பூசிபணிநடைபெற்று வருகிறது. கோமாரி நோய்மாடுகளை தாக்கினால் நோயுற்ற மாடுகளை தீனிஉண்ணாது. காய்ச்சல் ஏற்படும். வாயில் ஈறுகள்மற்றும் நாக்கில் புண்கள் எற்படும். மாட்டின் வாயிலிருந்து எச்சில் ஒழுகி கொண்டு சப்புக்கொட்டிக் கொண்டு காணப்படும். கால் குளம்புகளுக்கு நடுவே புண்கள் தோன்றும். கருச்சிதைவு எற்பட வாய்ப்புள்ளது. நோயுற்ற மாடுகளில் பாலைக் குடிக்கும் கன்றுகள்இறக்க வாய்ப்புள்ளது. மற்றபடி இந்நோய்கண்டால் மாடுகள்இறப்பதில்லை. மாறாகஅவைகளின் பால் உற்பத்தி குறையும், சினைப்புக்கும் திறன் குன்றி மாடுகள் மெலிந்து சொர சொரப்பான தோலுடன் காணப்படும். இதனால் சாமானியமக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் இதனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையினரால் கோமாரி நோய்தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.எனவே கால்நடை வளர்ப்போர் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Tags : livestock vaccine assistant assistant ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு