×

நரிக்குறவர் குடியிருப்பில் அதிகாரிகள் ஆய்வு

திருத்துறைப்பூண்டி, மார்ச்20: தினகரன் செய்தி எதிரொலியால் நரிக்குறவர் குடியிருப்பில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வீரன் நகரில் நரிக்குறவ சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டு மனைபட்டா, சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை கிடைக்காததால் வரும் நாடாளுமன்ற தேர்தலை நரிக்குறவ சமுதாயத்தினர் புறக்கணிக்க போவதாக கூறி தினகரனில் படத்துடன் நேற்று முன் தினம் செய்தி வெளியிட்டிருந்தோம். செய்திஎதிரொலியால்  கலெக்டர் ஆனந்த் திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்திற்கு நரிக்குறவர் கோரிக்கை குறித்து விசாரிக்க உத்திரவிட்டார்.

இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் பெத்துராஜ், விஏஓ முத்துக்குமார் ஆகியோர் நரிக்குறவர் குடியிருப்பிற்கு சென்று பார்வையிட்டு தாலுகா அலுவலகத்திற்கு நரிக்குறவ நிர்வாகிகளை அழைத்து வந்தனர். அவர்களிடம் தாசில்தார் ராஜன்பாபு உங்களது கோரிக்கைகள்மனுவாக கொடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் முடிந்த பிறகு உங்களது கோரிக்கை மனு கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்
இதுகுறித்து நரிக்குறவர்கள் சர்வோதயசங்கதலைவர் செல்வம் கூறுகையில் தினகரன் நாளிதழ் செய்தியால் தாசில்தார் அலுவலகத்தில் எங்களை அழைத்து பேசி தேர்தல்  முடிந்த பிறகு கோரிக்கை மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்ததையடுத்து தற்காலிகமாக தேர்தல் புறக்கணிப்பை வாபஸ்  பெற்றுக்கொள்வது  என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : apartment ,Narkurava ,
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...