×

வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை அறிய உதவி மையத்தை மக்கள் நாடலாம்

தஞ்சை,  மார்ச் 20: வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, இல்லையா என்பதை  தெரிந்து கொள்ள தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் உதவி மையத்தை  அணுகலாம். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் உதவி மையம்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் வாக்காளர்கள் சென்று நாம் வசிக்கும்  பகுதியை தெரிவித்து ஏற்கனவே வாக்காளர் அடைய அட்டை பெற்றிருந்தால் அதை  காண்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும். அவ்வாறு பெயர் இருந்தால் எந்த தொகுதியில் உள்ளது,  வாக்குச்சாவடி மையத்தின் பெயர், பாகம் எண் என்று முழு விபரத்தையும்  தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் வாக்குப்பதிவு நாளில் எவ்வாறு வாக்களிக்க  வேண்டும் என்பதையும் இந்த உதவி மையம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா