×

5 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஏற்பாடு முதல் நாளான நேற்று ஒருவரும் மனு தாக்கல் செய்யவில்லை

தஞ்சை, மார்ச் 20: தஞ்சை நாடாளுமன்றம், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய 5 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை நாடாளுமன்றம் மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. இதற்காக தஞ்சை மாவட்டத்தில் 5 இடங்களில் வேட்பு மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான அண்ணாதுரை, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளான தஞ்சை ஆர்டிஓ அலுவலகம், பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவும் என்று தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கும், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதவிர தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சுரேஷிடம் வேட்புமனு தாக்கல் செய்யவும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் அருணகிரியிடம் வேட்புமனு தாக்கல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு தஞ்சை மாவட்டத்தில் 5 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டிருந்தது. வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் ஒரு ஏடிஎஸ்பி தலைமையில் 2 டிஎஸ்பி, 6 இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என்று 150 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய வருவோர்களை மற்றும் அவருடன் வருவோர்கள் எல்லோரையும் பலத்த சோதனை செய்த பின்னரே அனுப்பப்பட்டனர். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டிருந்தது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வருவோர்களை வீடியோ பதிவு செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு அதன் பதிவுகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டது. எந்த காரணத்தை கொண்டும் 100 மீட்டர் எல்லைக்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 பேரை தவிர மற்றவர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.  வேட்புமனு தாக்கல் செய்ய வருவோர் இந்த 100 மீட்டர் எல்லைக்கு அப்பால் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லவே அனுமதிக்கப்பட்டனர். சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட ஒருவரும் மனு தாக்கல் செய்யவில்லை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாடாளுமன்றம், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. இதற்காக தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிருந்தன.  அலுவலக வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்பவருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதேபோல் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு பெறப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான தஞ்சை ஆர்டிஓ சுரேஷிடம் முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்று சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெறிச்சோடிய வேட்புமனு
தாக்கல் செய்யும் இடங்கள்
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை நாடாளுமன்றம் மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. இதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய தஞ்சை கலெக்டர் அலுவலகம், தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய 3 ஆர்டிஓ அலுவலகங்கள், தஞ்சை தாசில்தார் அலுவலகம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய மதியம் 3 மணி வரை யாரும் வரவே இல்லை. இதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் வெறிச்சோடியே காணப்பட்டது.

Tags : no one ,places ,
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...