×

வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன் திருமண மண்டபங்களில் வெளியூர் ஆட்களை தங்க வைத்தால் நடவடிக்கை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

பெரம்பலூர்,மார்ச் 20: வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன் திருமண மண்டபங்களில் வெளியூர் ஆட்களை தங்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக நடை முறைபடுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்களில் அரசியல்கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்களோ அவர்களது முகவர்களோ காதுகுத்து, வளைகாப்பு, கோயில்பூஜை, அன்னதானம், பிறந்தநாள் விழாக்கள் என்ற பெயரில் வாடகைக்கு எடுத்து, வாக்காளர்களுக்கு போலியாக விருந்து வைத்தல், பரிசு கொடுத்தல் போன்றவை முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து திருமண மண்டப உரிமையாளர்கள் தங்களது மண்டபங்களை வாடகைக்கு அளிக்கும்போது, அதனை தாசில்தாருக்கு தெரிவிக்க வேண்டும். கல்யாண மண்டபங்களை முன்பதிவு செய்யவரும் நபர்களிடம், பத்திரிகை நகல் போன்றஆதாரங்களை கேட்டுப்பெற்று பராமரிக்க வேண்டும். போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டால் அதுதொடர்பான விபரங்களை தாசில்தாரி டம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக வாக்குப்பதிவு முடியும் வரை வெளியூர் ஆட்களை மண்டபங்களில் தங்கவைக்க அனுமதிக்கக்கூடாது. அவ்வாறான அனுமதிகோரி அரசியல் கட்சிப் பிரமுகர்கள், வேட்பாளர்கள் அல்லது அவரது முகவர்களோ அணுகினால் அதுபற்றிய விபரத்தை உடனேதாசில்தாரிடம் மண்டப உரி மையாளர்கள் தெரிவிக்கவேண்டும். தங்கும்விடுதி உரிமையாளர்களும் இந்த விதிகளைப் பின்பற்றவேண்டும். நகை அடகுபிடிப்போர் மூலமாக வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்கப்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு எனதெரிவித்துள்ளார்.

Tags : election officer ,polling ,wedding halls ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...