×

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பு விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு

அரியலூர், மார்ச் 20: அரியலூர் கலெக்டர்  வளாகத்தில் அதிநவீன எல்இடி டிவி மூலம் 100 சதவீதம் வாக்களிப்பு தொடர்பான  விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற ேதர்தல் ஏப்ரல் 18ம் ேததி நடக்கிறது. இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் எல்இடி டிவி மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவை பதிவு செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு அடங்கிய குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டனர். இந்த குறும்படங்கள் மூலம் உங்கள் ஓட்டு தான் உங்களுக்கு அடையாளம், உங்கள் வாக்குதான் உங்கள் அடையாளம், வாக்குச்சாவடி மையத்தை உறுதி செய்யும் வகையில் 1950 கட்டணமில்லா தொலைபேசிக்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம். நமது வாக்கு விற்பனைக்கு அல்ல சிந்தித்து வாக்களிக்கவும், 18 வயது பூர்த்தியானவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த குறும்படங்களை கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஒளிபரப்பப்படுகிறது.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 447 நியாயவிலை கடைகளிலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட ஒட்டு வில்லைகள் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவை பதிவு செய்யும் வகையில் எந்த ஒரு வாக்காளர்களும் விடுபடக்கூடாது, வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற வாக்கியங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை பொதுமக்கள் அறியும் வண்ணமாக அனைத்து நியாய விலைக்கடைகளிலும் ஒட்டி விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 100 சதவீதம் வாக்குப்பதிவை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு, மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ஜெயஅருள்நிதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சரவணன், எழிலரசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சக்கரவர்த்தி பங்கேற்றனர்.

Tags : Ariyalur Collector ,office ,
× RELATED மனு கொடுத்த 30 நிமிடத்தில் நடவடிக்கை:...