×

அனைத்து கோயில்களிலும் சிலைகள் பாதுகாப்பு பெட்டகம் கட்டுவதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு

அரியலூர், மார்ச் 20: அனைத்து கோயில்களிலும் சிலைகள் பாதுகாப்பு பெட்டகம் கட்டுவதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கூறினார்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள ஆலந்துறையார் சிவன் கோயிலில் உற்சவர் ஆலந்துறையார், அருந்தவநாயகி அம்பாள் மற்றும் 63 நாயன்மார்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஜம்பொன் சிலைகள் மற்றும் கற்சிலைகள் உள்ளன. இந்த கோயிலில் நேற்று மாலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஆய்வு செய்தார். அப்போது தன்னிடம் உள்ள பதிவேடுகளின்படி கோயிலில் ஜம்பொன் சிலைகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். இதையடுத்து கோயிலில் உள்ள பழங்கால கற்சிலைகளை பார்வையிட்டார். பின்னர் கோயில் அர்ச்சகர் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் கற்சிலைகளாக இருந்தாலும் அவற்றின் தொன்மையை பொருத்து அச்சிலைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் விலை மதிப்பற்றவை. எனவே கற்சிலைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

இதைொடர்ந்து பொன்.மாணிக்கவேல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த கோயிலில் இன்றும் ஆய்வுப்பணி நடைபெறும். புகாரின் அடிப்படையில் ஆய்வு கொள்ளவில்லை. வழக்கமான ஆய்வு தான். புராதான கோயில்களில் உள்ள ஜம்பொன் சிலைகளை பாதுகாக்க அந்தந்த கோவில்களிலேயே வெடிகுண்டுளாலேயே துளைக்க முடியாத வகையிலான சிலைகள் பாதுகாப்பு பெட்டகங்கள் நிறுவதற்கான கட்டமைப்புகளை அரசிடம் பரிந்துரைத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் ரூ.2,000 கோடியில் சிலை பாதுகாப்பு பெட்டகம் கட்ட செலவாகும் என்றாலும், 10 ஆயிரம் கோவில்களாவது கட்ட முயற்சிக்கலாம்.
மாதம் ஒரு கோயிலாக கட்ட முயற்சித்தால்கூட இதுவரை 16 கோயில்களில் பாதுகாப்பு பெட்டகத்தை கட்டியிருக்கலாம். அரசு ஏனோ இதுவரை அப்பணிக்கு ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

Tags : Government ,temples ,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்