×

தா.பழூரில் ஊட்டச்சத்து கண்காட்சி

தா.பழூர்,மார்ச் 20: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் ரத்த சோகை தடுப்பு முகாம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது .  வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானப்பிரகாசம் வரவேற்றார். மாவட்ட திட்ட அலுவலர் முத்துலட்சுமி கலந்துகொண்டு ஊட்டச்சத்து குறைபாடு ரத்தசோகை, கர்ப்பிணிப் பெண்களிடம் கர்ப்ப காலத்தில் இருக்க வேண்டிய வழிமுறைகளை கூறினார். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு மருத்துவமனை செவிலியர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட  பெண்கள் ரத்தசோகை பரிசோதனையும் செய்து கொண்டனர்.கண்காட்சியில் சத்துக்கள் அதிகம் நிறைந்த பொருட்களை அங்கன்வாடி பணியாளர்கள் கீரைவகைகள் பழங்கள் காய்கறி மற்றும் பாரம்பரிய தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள் தயாரித்து காட்சிக்கு வைத்தனர், வளர்ச்சிக்கு ஏற்ற உயரம் இல்லாத குழந்தைகள், எடை குறைவாக உள்ள குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடை இன்மை ரத்தசோகை உள்ள குழந்தைகள் ஆகியவற்றிற்கு எவ்வாறு ஊட்டச்சத்து அளிப்பது குறித்தும்,கர்ப்பகாலங்களில் தாய்மார்கள் எடை ஒவ்வொரு மாதமும் பரிசோதித்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் உணவகளை உட்கொள்ள வேண்டும் போன்ற விளக்கம் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சியின் முடிவில் திட்ட உதவியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags : Nutrition exhibition ,TA ,
× RELATED கோடாலி கிராமத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்