×

பிளஸ்2 தேர்வு முடிந்த உற்சாகத்தை கொண்டாட சென்றபோது பரிதாபம் விசுவக்குடி அணைக்கு குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி

பெரம்பலூர்,மார்ச் 20: பிளஸ்-2 பொது த்தேர்வு எழுதிமுடித்த மாணவர்கள் உற்சாகத்தைக் கொண்டாட கும்பலாக விசுவக்குடி அணைக்கட்டிற்கு குளிக்க ச்சென்ற போது நீச்சல் போட்டி நடத்தியதில் குரும்பலூர் மாணவன்  நீரில் மூழ்கி பலியானான். பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூ ராட்சியின் 11வது வார்டு, காமராஜர் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் மோகன், மகேஸ்வரி ஆகியோரது மகன் ஹேமநாதன் (17). பெரம்பலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வின் கடை சிநாளில் பொதுத்தேர்வை ஆர்வமுடன் எழுதி முடித்த ஹேமநாதன் மற்றும் அவ ரோடு படித்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வெழுதி முடித்தவுடன், பள்ளிப் பருவத்தை முடித்ததன் நினைவாக அத னை உற்சாகமாகக் கொண்டாட நினை த்து வேப்பந்தட்டை தாலுகா, விசுவ க்குடி அணைக்கட்டு பகுதியில் குளித்து நீராடி மகிழச் சென்றுள்ளனர். விசுவக்குடி அணைக்கட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழைநீர் மதகுப்பகுதியில் 12அடி உயரத்திற்கும், பரவலாக தற்போது நான்கரை அடி உய ரத்திற்கும் தரையில் சகதியுடன் தேங்கியுள்ளது. இந்த அணைக்கட்டு 2015ம்ஆ ண்டு நவம்பரில் கட்டிமுடித்து 4 ஆண்டு களுக்குள் அங்கு குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள், ஆட்டோ டிரைவர் என 5 பேரை  காவு வாங்கி யுள்ளது. இதற்காக சம்மந்த ப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்காமல், யாரும் அணைக்கட்டில் குளிக்கக் கூடாது என்று  கண்து டைப்பு க்காக சிறிய பேனர் ஒன்றை மட்டும் வைத்துவிட்டு கண்டுகொள்ளா மல் விட்டுவிட்டனர்.

அந்த பேனரையும் மதுபாட்டிலோடு அணைக்கட்டுக்குச் செல்லும் குடிமகன்கள் கிழித்தெறிந்து விட்டனர். வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக சுற்று வட்டார இளை ஞர்கள் விசுவக்குடி அணைக்கட்டுக்குச் சென்று தடையைமீறி நீராடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தேர்வு முடித்து உற்சாக மிகுதியில் நீந்தித் திளைக்கச் சென்ற மாணவர்கள் அணைக்கட்டுக்கு ள் நீச்சல் போட்டியை வைத்துள்ளனர். அதில் ஹேமநாதனும் சக மாணவர்களோடு நீந்திச் சென்றுள்ளார். இடையே மற்றவர்கள் அறியாதபடி சேற்றில் கால் சிக்கி  போராடி நீந்திய ஹேம நாதன், சிறிது நேரத்தில் நண்பர்கள் கண்முன்னே தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைப்பார்த்து கரையில் நின்று கொண்டிந்த இதர மாணவர்கள் கூச்ச லிட்டுள்ளனர். அப்போது அணைக்கட்டு முன்பு ரூ2 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொதுப்பணித்து றை நீர்வள ஆதார அமைப்பின் உதவிப் பொறியாளர் நல்லுசாமி பணியாளர்க ளை அழைத்துக்கொண்டு அணைக்கட்டு க்கு சென்று பார்த்துள்ளார்.அங்கு நீச்சல் தெரிந்த சில மாணவர்கள் ஹேமநா தனை தண்ணீரில் மூழ்கித் தேடிப்பா ர்த்துள்ளனர்.பிறகு தொண்டமாந்துறை இளைஞர்கள் சிலர் தண்ணீரில் மூழ்கி சேற்றில் புதையுண்டிருந்த ஹேமநாதன் சடலத்தை மீட்டனர். சடலத்தைக் கண்ட சக மாணவர்கள் கதறித்துடித்து அழுத னர். பின்னர் இதுகுறித்துத் தகவலறிந்து அரும்பாவூர் போலீசார்   விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : student ,examination ,Vishukkudi ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...