×

பெரம்பலுார் எம்பி தொகுதி வேட்பாளர்கள் செலவிற்காக வங்கி கணக்கு துவங்க வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவு

பெரம்பலுார், மார்ச் 20: பெரம்பலுார் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கிற்காக தனி வங்கி கணக்கு துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலுார் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்த லுக்காக மேற்கொள்ளப்படும் செலவினம், தேர்தல் செலவினமாக கருதப் படும். வேட்புமனு தாக்கல் செய்யும் நாளிலிருந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள்வரை மேற்கொள்ளப்பட்ட செலவினம் வேட்பாளரின் தேர்தல் செலவுக்கண க்காக கருதப்படும். அதன்படி, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, நாடாளுமன்ற தேர்தல் செல வினத்திற்கான உச்ச வரம்பு ரூ.70லட்சமும் நிர்ணயக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ் வொரு வேட்பாளரும் அல்லது அவரின் முகவரும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்வரை மேற்கொள்ளப்பட்ட செல வீனத்தினை தனியாக பராமரிக்க வேண்டும்.

மேலும் வேட்பாளர் ஒவ்வொருவரும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக் குள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தன்னுடைய தேர்தல் செலவுக் கணக்குகளின் ஒரு நகலை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் பொதுகூட்டங்கள், சுவரொட்டிகள், தட்டிகள், வண்டிகள், செய்தித்தாள் அல்லது மின்னணு ஊடகத்தில் விளம்பரங்கள் போன்றவையும் வேட்பாளரின் செலவுக் கணக்கில் அடங்கும். எனவே தேர்தல் செலவினங்களுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் தனியாக வங்கிக் கண க்கு துவங்கப்பட வேண்டும் என்பதுடன் தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும் இதற்காக துவங்கப்பட்ட வங்கிக்கணக்கிலிருந்து மட்டுமே செய்திட வேண்டும்.  மேலும் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் பிரசாரத்திற்காக அவரால் பயன்படுத் தப்படும் அனைத்து வாகனங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட தேர்தல் அலுவலக த்திற்கு அளித்து அவற்றை பயன்படுத்துவதற்கான அனுமதியினை தேர்தல் நடத்தும் அதிகாரி யிடமிருந்து பெற வேண்டும். அதனை வாகனத்தின் முன்பக்கத்தில் பார் வைக்கு தெரியுமாறு ஓட்ட வேண்டும். மேலும் அனைத்து பதிவேடுகளும் தேர்தல் பிரசார காலத்தில் குறைந்தது 3 முறையா வது தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் செலவின பார்வையாளர் ஆகி யோரின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மேலும் வேட்பாளர் தொடர்பான அனை த்து பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் வீடியோபதிவு செய்யப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி