×

பெரம்பலூரில் முதல் நாளில் வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

பெரம்பலூர்,மார்ச் 20: மனு தாக்கலுக்கான முதல் நாள் வேட்பாளர்கள் ஒருவர்கூட வரவில்லை. 11 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 2ம்கட்டமாக ஏப்ரல் 18ம்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதனையொட்டி வேட்பு மனுதாக்கல் நேற்று (19ம்தேதி) தொடங்கி வருகிற 26ம்தேதி வரை நடக்கிறது. இதன்படி மனுதாக்கல் செய்ய விரும்புவோர் 19ம்தேதி முதல் 22ம்தேதிவரையும், சனி,ஞாயிறு விடுமுறைக்குப்பிறகு 25,26 தேதிகளிலும், காலை 11மணிமுதல் மாலை 3 மணிவரை மனுதாக்கல் செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிடுவோர் பெரம்பலூர் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சாந்தாவிடம் கலெக்டர் அலுவலக முதல்தளத்திலும், முதன்மை உதவித்தேர்தல் நடத்தும் அலுவலரான (பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி) பெரம்பலூர் வருவாய்கோட்டாட்சியர் விஸ்வநாதனிடம் பழையபஸ் டாண்டு ஆத்தூர்சாலையிலுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் என 2இட ங்களில் மட்டுமே மனுதாக்கல் செய்யலாம். இந்நிலையில் மனுதாக்கலுக்கான முதல்நாளான நேற்று மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சாந்தா, முதன்மை உதவித்தேர்தல் நடத்தும் அலுவலரான விஸ்வநாதன் ஆகியோர் காலை 10 மணிக்கே அலுவலகத்திற்கு வந்துவிட்டனர்.

ஆனால் செவ்வாய்க்கிழமை வேண்டாமென கருதியதாலோ என்னவோ யாருமே மனு தாக்கல்செய்ய வரவில்லை. இந்த மனுதாக்கலுக்காக கலெக்டர் அலுவலகத்தில், டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர், ஹேண்ட் ஹோல்ட் மெட்டல் டிடெக்டர் ஆகிய மின்னணு சாதனங்கள் கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்வோர் பரிசோதிக்கப்பட்டனர். காலை 11 மணிமுதல் மதியம் 3 மணிவரை எந்தப் பரபரப்பும் இல்லாமல் கலெக்டர் அலுவலகமே வெறிச்சோடிக்காணப்பட்டது. போலீசார் கலெக்டர் அலுவலகம் முன், 100மீட்டர் எல்லையில் உள்ள சிறுவர்பூங்கா முன் நிறுத்தப்பட்டு கால்கடுக்கக் காத்துக்கிடந்தனர். இருந்தும் மனுதாக்கலுக்கு விண்ணப்பிப்பதற்காக ஒரேநாளில் 11பேர் விண்ணப்பங்கள் பெற்று சென்றனர். பவுர்ணமிக்காக... மனுதாக்கல் செய்ய நல்லநாள் பார்க்கும் வேட்பாளர்கள் இன்று (20ம்தேதி) பவுர்ணமி என்பதால் அதிகப்படியானோர் மனுதாக்கல்செய்ய முன்வரலாம், அல்லது வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் அதிகப்படியானோர் மனுதாக்கல்செய்ய முன்வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : candidate ,Perambalur ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்