×

காரைக்கால் போக்குவரத்துறையில் வாகன பதிவு, பெயர் மாற்றத்திற்கு இழுத்தடிப்பு நீண்டநேரம் காத்திருப்பதால் பொதுமக்கள் கடும் அவதி

காரைக்கால், மார்ச் 20: காரைக்கால் மாவட்ட போக்குவரத்து துறையில் வாகன பதிவு மற்றும் பெயர் மாற்றத்திற்கு இழுதடிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, எஸ்.யு.சி.ஐ கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பிலால் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி போக்குவரத்து துறையில் ஓரிரு நாட்களில் முடியும் அலுவலக பணிகளானது, காரைக்கால் மாவட்ட போக்குவரத்துறையில் மட்டும் மாதக் கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. புதுச்சேரியை விட வாகன எண்ணிக்கைகள் குறைந்த காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் அலுவலக ஊழியர்களால் திட்டமிடப்பட்டு காலம் கடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

புதுச்சேரி போக்குவரத்துறை அலுவலகத்தில் வாகன பதிவு, பெயர் மாற்றம், வாகன உரிமம் பெறுதல், மாற்று சான்று வாங்குதல் போன்றவற்றிக்கு,  கட்டணங்கள் செலுத்தும் நேரம், காலை 9 மணி முதல் ஒரு மணி வரை என்றும், மதியம் 2.30 மணி முதல் 5.30 வரை செயல்பட்டு வருகிறது. ஆனால், காரைக்காலில் புதிய சட்டமாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணியுடன் கட்டணங்கள் வசூலிப்பது நிறுத்தி விடுகிறார்கள். இதன் காரணமாக பலர் பலவித இன்னலுக்கு ஆளாக நேரிடுகிறது. கிட்டத்தட்ட ஒரு நாள் வீணாகி போவதுடன், ஒரு சிலவற்றிக்கு அபராதத் தொகையும் வசூல் செய்யபப்டுகிறது. மேலும், புதுச்சேரியில் வாகனங்களுக்கு பர்மிட் ரெனிவல் செய்திட பார்க்கிங் குறித்து ஏதும் கோராமல் 7 நாட்களில் முடியக்கூடிய அலுவலக பணிகளானது, காரைக்காலில் மட்டும் உரிய பார்க்கிங் வசதி செய்து கொடுத்தும், இரண்டு மாதங்கள் தொடர்ந்து அலைய வேண்டியுள்ளது. அதேபோல புதுவையில் புதிய பர்மிட் பெற 15 நாட்கள் எனும் போது காரைக்காலில் மட்டும் இரு மாதங்கள் ஆகிறது. புதுவையில் பர்மிட் சரண்டர் செய்திட, 3, நாட்கள் எனும்போது, காரைக்காலில் மட்டும் ஒரு மாதமாகிறது. புதுவையில் பர்மிட் பெயர் மாற்றம் செய்திட 15 நாட்கள் எனும் போது காரைக்காலில் மட்டும் குறைந்தது இரண்டு மாதங்களாகிறது. புதுவையில் ஒருசில படிவங்களுக்கான பணிகள் 3, நாளில் முடிந்து விடும். ஆனால் காரைக்காலில் சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் தொடர்ந்து அலைந்தால்தான் முடியும் என்ற அவல நிலை உள்ளது. காலதாமதம், இழுதடிப்பு போன்ற செயலுக்கு வழிவகுக்கும். எனவே, புதுச்சேரி போக்குவரத்து துறையைப் போல், காரைக்கால் மாவட்ட போக்குவரத்து துறையிலும், காலை முதல் மாலை வரை கட்டணம் வசூல் செய்ய வேண்டும். காலகெடுவை குறைத்து அனைத்து பணிகளையும் விரைந்து முடித்துதர முன்வர வேண்டும் என்றார்.

Tags : Karaikal ,public ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...