×

வேதாரண்யம் அருகே பைக் மோதி முதியவர் சாவு

வேதாரண்யம், மார்ச் 20: வேதாரண்யம் அருகே பைக் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். வேதாரண்யம் அருகே செம்போடை கடைத்தெருவில் கரியாப்பட்டினத்தை சேர்ந்த தங்கவேல் (68) என்பவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் தங்கவேல் மீது மோதியது. இதில் கீழே விழுந்ததில் தங்கவேல் பலத்த காயம் அடைந்தார்.  அருகில் இருந்தோர் தங்கவேலுவை மீட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Bike killer ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்