×

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மறுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை கண்டித்து சென்னையில் ஏப்ரல் 2ல் போராட்டம் காவிரி விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

நாகை, மார்ச் 20: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மறுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை கண்டித்து சென்னையில் ஏப்ரல் 2ம்தேதி காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாகையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட கூட்டம் நடைபெற்றது. நாகை வடக்கு மாவட்ட தலைவர் வைத்தியநாதன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். நாகை தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பரமணியன், செயலாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நாகை ஒன்றிய செயலாளர் செல்லப்பா வரவேற்றார். கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பாண்டியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நாகை தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள்,  ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய, மாநில அரசுகள் பயிர் காப்பீடு செய்வதில், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தயக்கம் காட்டும் காப்பீட்டு நிறுவனத்தின் மீது வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் விவசாயிகளின் நலன் கருதி கொண்டு வரப்பட்ட அந்த திட்டம் தனியாரை அனுதித்து அவர்களுக்கு துணை போகும் அரசாங்கம், விவசாயிகளின் விரோத போக்கால் பாக்கப்பட்ட விவசாயிகள் வீதியில் நின்று போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை இயற்கை சீற்றம் வருகிறது.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு புள்ளியல் துறை ஆய்வு அறிக்கை கொடுத்து பாதிப்புக்கு  ஏற்ப உரிய இழப்பீட்டுத் தொகை மத்திய, மாநில அரசுகளிடம் பெற்று கொள்கிற காப்பீடு நிறுவனம் காப்பீட்டு தொகையை வழங்கும் நடவடிக்கை எடுக்காமல் தட்டி கழிக்கிற காப்பீட்டு நிறுவனங்கள் புள்ளியல் துறை  அறிவியல் அறிக்கையை உரிய இழப்பீடு தொகையை  பெற்றுக் கொண்டு  பீரிமியம் செலுத்திய விவசாயிகளுக்கு வழங்க மறுத்து கால தாமதம் செய்து வருகிறது.  இதனால் ஆண்டுக்கு ஒரு முறை பல ஆயிரம் ஊழல் முறை கேடு செய்து வருகிறது.  இதை தட்டிக்கேட்கிற விவசாயிகள் நியாயமான கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டிய தமிழக அரசாங்கம் காவல் துறை கொண்டு அச்சுறுத்துகிறதே தவிர பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  அரசு வழங்கி இருக்கிற உரிய இழப்பீட்டு தொகை காப்பீட்டு நிறுவனம் வழங்க எந்த நடவடிக்கை எடுக்காமல் தட்டி கழிக்கிறது. எனவே இதை கண்டித்து வரும் ஏப்.2ம் தேதி சென்னையில் நீயூ இந்தியா அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகள் சென்று  முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். இழப்பீட்டு தொகை வழங்கும் வரை அங்கேயே காத்திருப்பது என்று  முடிவு செய்துள்ளோம். தமிழக அரசு உரிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...