×

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஆப்பிரிக்க கெளுத்தியால் உள்நாட்டு மீன்களுக்கு பாதிப்பு உற்பத்தியை தடை செய்ய வலியுறுத்தல்

நாகை, மார்ச் 20: மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஆப்பிக்க கெளுத்தி மீன்களை பண்ணையில் வளர்க்க கூடாது என்று கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாகை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நாகை மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த பிரதான தொழிலாக உள்நாட்டு மீன் வளர்ப்பு உள்ளது. உள்நாட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சீனப் பெருங்கெண்டை மேலும்  மரபியல் மேம்படுத்தப்பட்ட வளர்ப்பு திலேப்பியா மற்றும் கொடுவா மீன் குஞ்சுகளை தேர்வு செய்து விவசாயிகள் மீன் வளர்ப்பு பணி மேற்கொண்டு பரிய வருவாயினை ஈட்டி வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளினால் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது முழுவைதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இம்மீன்  இனங்கள் மற்ற மீன்கள் மற்றும் நீர் வாழ் உயிரினங்களை அதிதீவிரமாக  இரையாக உணணும் தம்மை உடையதால் நமது பாரம்பரி மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும் அவற்றின் முட்டைகளையும் முற்றிலும் அழித்துவிடும்.  ஆகையினால் நமது நீர் நிலைகளில் உள்ள அனைத்து  பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழியும் வாய்ப்புள்ளது. மேலும் இம் மீன் இனங்கள் காற்றில் உள்ள பிராண வாயுவினை சுவாசிக்கும் தன்மையும் மற்றம் மிகக் குறைந்த ஆழமுள்ள நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடையது.

இம் மீன்கள் பாரம்பரி உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் மேற்கொண்டு அவற்றை மரபியலை சிதைத்து ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் பல்பெருக்கமடைய வல்லமையுடையது. மேலும் மழை மற்றும் பெரு வெள்ள காலங்களில் இம்மீன் இனங்கள் வளர்ப்பு செய்யும் குளங்களில் இருந்து தம்பி வெளியேற வாய்ப்பு உள்ளதாலும் தப்பித்து செல்லும் மீன்கள் உள்நாட்டு நீர் நிலைகளில் மற்ற பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து பல்பெருக்கடைந்து ஒருகாலகட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கனை தவிர பிற மீன்கள் இல்லாமல் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே மத்திய மற்றும் மாநில அரசுகளினால் தடைசெய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்க ரக கெளுத்தி  மீன்களை வளர்ப்பு செய்வது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான புகார்கள் ஏதேனும் பெறப்படின் அம்மீன்களை  முற்றிலும் அழித்திட வேண்டி அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பொது மக்களும் இவ் வகை மீன்களை கொள்முதல் செய்திட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு அரசுக்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மீன்களை அழிக்கும்
மழை மற்றும் பெரு வெள்ள காலங்களில் இம்மீன் இனங்கள் வளர்ப்பு செய்யும் குளங்களில் இருந்து தம்பி வெளியேற வாய்ப்பு உள்ளதாலும் தப்பித்து செல்லும் மீன்கள் உள்நாட்டு நீர் நிலைகளில் மற்ற பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து பல்பெருக்கடைந்து ஒருகாலகட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கனை தவிர பிற மீன்கள் இல்லாமல் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.
முற்றிலும் அழிக்கனும்
மத்திய மற்றும் மாநில அரசுகளினால் தடைசெய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்க ரக கெளுத்தி  மீன்களை வளர்ப்பு செய்வது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான புகார்கள் ஏதேனும் பெறப்பட்டால் அம்மீன்களை முற்றிலும் அழித்திட வேண்டி அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Tags : fishermen ,African gelatiya ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...