×

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இன்று நெல்லை வருகை

நெல்லை, மார்ச் 20: நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் பிரபாகரன் எம்பி ஆகியோர் கூட்டாக வௌியிட்ட அறிக்கை:  நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆசியுடனும், அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்துகளுடனும் போட்டியிடும் அமைப்புச் செயலாளரான வேட்பாளர் பி.எச். மனோஜ் பாண்டியன், இன்று (20ம் தேதி) காலை 9.30 மணிக்கு நெல்லை வருகிறார். நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் நெல்லை பகுதியில் உள்ள அண்ணா, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், டாக்டர் அம்பேத்கர், பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, வீரன் அழகுமுத்துகோன், வீரபாண்டிய கட்டபொம்மன், பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.  நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், அமைப்பு செயலாளர்கள், எம்பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

 எனவே, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊராட்சி, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர் மன்றம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வக்கீல் பிரிவு, சிறுபான்மை பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அணி திரண்டுவருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags : Nellai ,constituency ,candidate ,AIADMK ,
× RELATED நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார்...