அமெரிக்க விண்வெளி மையத்திற்கு செல்ல ஆழ்வார்குறிச்சி பள்ளி மாணவர்கள் தேர்வு

கடையம், மார்ச் 20: கோ பார் குரு பப்ளிகேசன்ஸ், அஸ்ட்ரானட் மெமொரியல் பவுண்டேஷன் மற்றும் ப்ளோரிடா இன்ஸ்டியேட் ஆப் டெக்னாலஜி இணைந்து தேசிய அளவிலான அறிவியல் கட்டுரை எழுதுதல் போட்டியை நடத்தின. இதில் வெற்றி பெற்று நாசா விண்வெளி மையத்திற்கு செல்லும் வாய்ப்பை ஆழ்வார்குறிச்சி குட்ஷெப்பேடு மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள்  பெற்றுள்ளனர்.இப்போட்டியில் ஆழ்வார்குறிச்சி குட்ஷெப்பேடு பள்ளி 7ம் வகுப்பு மாணவன் ராஜேஷ், மாணவி மீரா யாஸ்மின், 6ம் வகுப்பு மாணவி சிந்தியா, 9ம் வகுப்பு மாணவி அபிஷா செல்லம் ஆகியோர் கலந்து கொண்டு முதற்கட்ட தேர்வில் தகுதி பெற்றனர். இதையடுத்து அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் வருகிற மே மாதம் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை குட்ஷெப்பேடு பள்ளி தாளாளர் ஆன்டனி பாபு, பள்ளி முதல்வர் ஜோஸ்பின் விமலா, தலைமை ஆசிரியை மீராள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பாராட்டினர்.

Related Stories: