×

குலசேகரன்பட்டினத்தில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

உடன்குடி,மார்ச் 20: குலசேகரன்பட்டினத்தில் பழமையான வேப்பமரம் திடீரென முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குலசேகரன்பட்டினம் கொத்துவாப்பள்ளி தெரு பகுதி மெயின் ரோட்டில் மிகவும் பழமையான வேப்பமரங்கள் உள்ளன.
இதில் உள்ள வேப்பமரம் ஒன்று நேற்று காலை திடீரென சாலையில் முறிந்து விழுந்தது. குலசேகரன்பட்டினத்தில் இருந்து மணப்பாடு, கிழக்குகடற்கரை செல்லும் சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் முறிந்து விழும் நேரத்தில் வாகனங்கள் ஏதும் அந்த வழியே செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. மரம் விழுந்ததையடுத்து சுமார் 3மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Kulasekarapattinam ,
× RELATED பிப்.28 நடைபெறும் விழாவில் பிரதமருடன் முதல்வரும் பங்கேற்பு