×

3 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு

புதுக்கோட்டை, மார்ச் 20: ஓட்டப்பிடாரம் உள்பட 3 தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கனிமொழி கூறினார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின் நேற்று மாலை சென்னையிலிருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த கனிமொழி எம்பிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:  விடுபட்ட மூன்று சட்டமன்ற தொகுதிக்கும் 18ம் தேதியுடன் சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. வரும் 25ம் தேதி தூத்துக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். தொடர்ந்து திருச்செந்தூரில் இருந்து பிரசாரத்தை தொடங்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர் சொர்ணக்குமார், முன்னாள் எம்பி.ஜெயசீலன், தூத்துக்குடி விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பேரூரணி சித்திரைசெல்வன், விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், மாவட்ட மகளிர் அணி ஜெஸிபொன்ராணி, மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட சிறுபணமை நல உரிமை பிரிவு துணை செயலாளர் சாயர்புரம் ராஜேஷ் ரவிசந்தர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய சிறுபான்மைபிரிவு அணி செயலாளர் பீட்டர், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் புதூர் சுப்பிரமணியன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோதிராஜா, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வெயில்ராஜ், ஓட்டபிடாரம் ஒன்றிய செயலாளர் சண்முகையா, தூத்துக்குடி ஒன்றிய செயலாளர்கள் மாடசாமி, ரவி, பரமன்குறிச்சி இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : constituencies ,by-election ,
× RELATED கேரளாவில் ராகுல் போட்டியிடும் வயநாடு...