×

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதி மீறியதாக 49 வழக்குகள் பதிவு

தூத்துக்குடி, மார்ச் 20: தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக இதுவரையில் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 16 லட்சத்து 85 ஆயிரத்து 900 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அkலில் உள்ள நிலையில் விதிமுறைகள் மீறல் தொடர்பாகவும், பணம் பட்டுவாடா உள்ளிட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கணக்கு இல்லாத மற்றும் ஆவணங்கள் இல்லாத பணம் இருந்தால் பறக்கும்படையினர் பறிமுதல் செய்து அதனை கருவூலத்தில் ஒப்படைக்கின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் நேற்று மாலை வரையில் மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கட்சிகள், அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்டவர்கள் என மொத்தம் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் ஆகியவை மொத்தம் இதுவரையில்  மூலம் 16,85,900 ரூபாய் ரொக்க பணமும், 90,900 ரூபாய் மதிப்புள்ள சுடிதார் மற்றும் துணி வகைகளும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்றும் தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் பறக்கும் படையினர் வாகனசோதனை நடத்தினர். இதில் தூத்துக்குடியை சேர்ந்த பொன்ராஜ் என்பவரது காரை சோதனை செய்த போலீசார் அதிலிருந்த 71 ஆயிரம் ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : district ,Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் தேர்தல் விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை