×

8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்கும் கட்சிக்கு விவசாயிகள் ஆதரவு கூட்டமைப்பினர் தீர்மானம்

திருவண்ணாமலை, மார்ச் 20: 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்கும் கட்சியை ஆதரிப்பது என எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.திருவண்ணாமலையில் தமிழ்மின் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில், கூட்டமைப்பு நிர்வாகிகள் எஸ்.அபிராமன், அழகேசன், பிரகாஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயன்துரை, கவிதா, நாராயணன், தருமபுரி சந்திரகுமார், காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், விவசாயிகளை பாதுகாக்க கோரியும் இந்த மாத இறுதியில் கருத்தரங்கம் நடத்தவும், கம்யூனிஸ்ட் கட்சி நல்லக்கண்ணு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்டோரை பங்கேற்க அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்கும் அரசியல் கட்சிக்கு, இந்த தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும். ஒருவேளை, அரசியல் கட்சிகள் அறிவிக்க தவறினால், எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாங்களாவே முன்வந்து நேரடியாக தேர்தலில் போட்டியிடுவார்கள்.வரும் மே 1ம் தேதி அல்லது அதன் பிறகு நடைபெறும் கிராம சபா கூட்டங்களில், எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆதாரமாக கொண்டு உயர்நீதிமன்றத்தில் முறையிடுவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Tags : support federation ,
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...