×

திமுக கூட்டணிக்கு விவசாய சங்கம் ஆதரவு

பள்ளிப்பட்டு, மார்ச் 20: திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், திமுகவின் தேர்தல் அறிக்கை இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில், திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்கம், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் என்று அச்சங்கத்தின் தலைவர்   வேணுகோபால் ராஜி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.,ஸ்டாலின் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில்,  விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட், படித்து விட்டு வேலை  வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் வட்டியில்லா வங்கி கடன் உதவி என தெரிவித்துள்ளார். மேலும், விவசாய கடன் குறித்து தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கூறியிருப்பது விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியை தந்துள்ளது. இதனால், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்  திமுக கூட்டணிக்கு ஆதரவு தரப்படும் என்று  கூறினார்.



Tags : DMK Alliance ,Agricultural Association ,
× RELATED தேர்தல் பணிகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்