×

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் நீர் பாதுகாப்பு சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி, மார்ச் 20: கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் கும்மிடிப்பூண்டி நிலத்தடி நீர்  பாதுகாப்பு சங்கம் சார்பில் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. சிப்காட்டில் இரும்பு உருக்காலை, கெமிக்கல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி  வருகிறது.இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும்  நச்சுக் கழிவு நீர் நிலத்தடி நீரில் பாய்ந்து ஒட்டு மொத்தமாக நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கம்   தொடங்கப்பட்டுள்ளது. இச்சங்கம் சார்பில் நேற்று கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகில்  பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம், அதன் நிறுவன தலைவர் எஸ். ரவிஎடிசன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பொது  செயலாளர்  பால்சாமுவேல்,  திமுக புரவலர் மனோகரன், பொருளாளர் நிர்மல்சுதாகர், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் நடந்ததை கண்டித்தும், 1200 வீடியோக்களை பதிவு செய்த வாலிபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இருந்து குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு  ரெட்டம்பேடு வரை ஊர்வலமாகச் சென்றனர். இதில் நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்க  நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


Tags : Pollachi ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!