×

சட்டமன்ற இடைத்தேர்தல் அறிக்கை பூந்தமல்லி தொகுதியில் 3 மேம்பாலம் அமைக்கப்படும்: திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி

சென்னை, மார்ச் 20: பெரம்பூர், திருப்போரூர், பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 18 தொகுதிகள் உள்பட 21 சட்டசபை தொகுதிகளுக்கான திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல்  அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.பெரம்பூர் தொகுதி: பெரம்பூர் விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். கொடுங்கையூர் குப்பை கிடங்கு அகற்றப்படும். சாலைகள் சீரமைக்கப்படும். குடிசை மாற்று  வாரிய வீடுகள் சீரமைக்கப்படும். பொறியியல் கல்லூரிகள் துவங்கப்படும். பேருந்து வசதிகள் செய்து தரப்படும்.திருப்போரூர் தொகுதி: பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். கோவளம் அருகே கேளம்பாக்கம் சாலை சந்திப்பு, மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில்  திருக்கழுக்குன்றம் மற்றும் ராஜிவ்காந்தி சாலை சந்திப்பு, கேளம்பாக்கத்தில் கோவளம் சாலை சந்திப்பு போன்ற பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்படும். தற்போது வேளச்சேரி வரையில் இயங்கும் பறக்கும் ரயில் திட்டம்  மாமல்லபுரம் வரை நீட்டிக்கப்படும். மாமல்லபுரம் - செங்கல்பட்டு - திருப்பெரும்புதூர் - திருவள்ளூர் இடையே புதிய ரயில்பாதை அமைக்கப்படும். திருப்போரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும். நெம்ேமலி,  சதுரங்கப்பட்டினம் பகுதியில், மீனவர்களுக்காக மீன்களை பதப்படுத்த குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாகன விபத்துக்களில் காயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்காக மாமல்லபுரத்தில் அவசர சிகிச்சை பிரிவுடன் கூடிய 24 மணி நேரமும் செயல்படும் அரசு மருத்துவமனை அமைக்கப்படும்.கடற்கரை ஒரப்பகுதிகளில் வாழும் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு வசதியாக கோவளம், நெம்மேலி, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் உருவாக்கப்படும்.திருப்போரூரில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். திருப்போரூர், நாவலூர், மானாம்பதி, காயார் ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கி திருப்போரூரில் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்கப்படும்.  திருப்போரூரில் துணை நீதிமன்றம் அமைக்கப்படும்.பூந்தமல்லி தொகுதி:பூந்தமல்லியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். பூந்தமல்லி சாலை குமணன்சாவடியிலிருந்து குறுக்குச் சாலை வரை மேம்பாலம் அமைக்கப்படும். கூடப்பாக்கம் ஊராட்சி கலெக்டர் நகர் பகுதியில் வாழும் மக்களுக்கு  பட்டா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். சென்னீர்குப்பம் ஊராட்சி குமரன் நகர், செல்வகணபதி நகர், லீலாவதி நகர், ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை எண் 4ல் நசரத்பேட்டை கூட்டு ரோட்டில் மேம்பாலம் அமைக்கப்படும். சென்னை-பெங்களூரு சாலையின் திருமழிசையில் மேம்பாலம் அமைக்கப்படும். திருநின்றவூரில் பாதாள சாக்கடை திட்டம்  கொண்டுவரப்படும்.இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Assembly Elections ,Stalin ,constituency ,Poonamalle ,DMK ,
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...