×

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த இன்ஸ்பெக்டர் திடீர் சாவு

சென்னை, மார்ச் 20: சென்னைக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த இன்ஸ்பெக்டர், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராமையா (47). இவரது மனைவி சரஸ்வதி (38). இவர்களது மகன் கதிர் (18). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து  வருவதால், கீழ்ப்பாக்கம் உதவி ஆய்வாளர் காவலர் குடியிருப்பில் வசிக்கின்றனர்.இந்நிலையில், தேர்தல் பணிக்காக கடந்த 3ம் தேதி ஐசிஎப் காவல் நிலையத்திற்கு ராமையா வந்துள்ளார். 8ம் தேதி, பணியில் இருந்த ராமையாவுக்கு திடீரென கடும் தலைவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, அயனாவரம் உதவி கமிஷனர் பாலமுருகன், ராமையவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு அவருக்கு மூலைக்கு செல்லும் நரம்பில் பிரச்னை இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து, போலீசார் ராமையாவை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு,  ராமையாவுக்கு அறுவை சிகிச்சை செய்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ராமையா பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.


Tags : Inspector ,election security office ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு