×

பேபி நகர், தரமணி பஸ் நிறுத்தங்களில் நடைமேம்பால ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதி

வேளச்சேரி, மார்ச் 20: சென்னை ராஜிவ் காந்தி சாலையில் அமைந்துள்ள பேபி நகர், தரமணி பேருந்து நிறுத்தங்களில் நடைமேம்பால பகுதியை வியாபாரிகள் ஆக்கிரமித்து விளம்பர பதாகைகளை வைப்பதாலும், வாகனங்கள்  நிறுத்தி வைப்பதாலும் முதியோர் மற்றும் சிறுவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.தரமணி 100அடி சாலை வேளச்சேரி விஜயநகரில் தொடங்கி எஸ்ஆர்பி டூல்ஸ் பஸ் நிறுத்தம் அருகே ராஜிவ் காந்தி சாலையுடன் இணைகிறது. சுமார் 3.5 கிமீ நீளம் கொண்ட இந்த சாலையில் வாகனங்கள் எண்ணிக்கை  அதிகரித்ததை அடுத்து பாதசாரிகள் சாலையை கடப்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. எனவே இந்த சாலையில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை பயணிகளிடையே எழுந்தது.     இதையடுத்து பேபி நகர், தரமணி பேருந்து நிறுத்தங்கள் அருகே கடந்த ஓராண்டுக்கு முன்பாக நடைமேம்பாலம்  அமைக்கப்பட்டது. மேலும் தற்போது தானியங்கி படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நடை மேம்பாலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சிறுவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. ஆனால் இந்த தானியங்கி படிக்கட்டுகளுக்கு செல்லும் வழியை சுற்றி அருகில் உள்ள கடை உரிமையாளர்கள்  தங்களது கடைகளின் பெயர் பலகைகள் வைத்திருப்பதாலும், பாதையை ஆக்கிரமித்து வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வைப்பதாலும், தானியங்கி படிக்கட்டுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. புதிதாக  வருபவர்கள் நடை மேம்பாலத்துக்கு செல்ல வழி தெரியாமல் குழம்பும் நிலை உள்ளது.
அதேப்போல் பேபி நகர் பஸ் நிறுத்தம் அருகே தானியங்கி படிக்கட்டுக்கு  செல்லும் வழியில் சாலையைவிட பிளாட்பார்ம் 2 அடி உயரமாக இருப்பதால் முதியவர்கள், சிறுவர்கள், சிறுவர்கள்   நடைமேடைக்கு செல்ல முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியை  சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள்   ஆய்வு செய்து நடை மேம்பாலம் செல்லும் வழியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள    கடைகளின் பெயர் பலகைகளை அகற்றவும், பாதையை ஆக்கிரமித்து வாகனம்   நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : Occupied Occupied Shops ,Baby Nagar ,Bus Stations ,Taramani ,
× RELATED வரலாறு காணாத கனமழையால் வேளச்சேரி பேபி நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது!