×

அறிவொளி நகர் பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

பொங்கலூர்,மார்ச்19: திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சிக்குட்ப்பட்ட அறிவொளி நகரில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 1993ம் ஆண்டு திருப்பூரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அப்போதைய கோவை கலெக்டரால் வீடு மற்றும் உடமைகளை இழந்த ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோருக்கு பல்லடம் அறிவொளி நகரில் அரசு நிலம் ஒதுக்கியது. சுமார் 25 ஆண்டுகளாகியும் அரசு ஒதுக்கீடு செய்த நிலத்திற்க்கு இதுவரை பட்டா வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பல்லடம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.,கரைப்புதூர்.நடராஜன் முதல் முதல்வர் வரை இப்பகுதியினர் பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள்  நூற்றுக்கணக்கானோர் நேற்று அறிவொளிநகர் சமுதாயநலக்கூடம் அருகே திரண்டு ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் தொடர்ந்து பட்டா வழங்காமல் வஞ்சித்து வரும் அரசு மற்றும் அதிகாரிகளைக் கண்டித்து நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என்றும் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் பட்டா வழங்கும் வரை எந்த தேர்தல் நடந்தாலும் அதனையும் புறக்கணிப்பு செய்வது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

Tags : area ,Enlightened City ,elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...