×

வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க வேலி

குன்னூர், மார்ச் 19: நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால், மலைக்காய்கறி தோட்டங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உள்ள பயிர்கள் வாடி வருகின்றன.  மேலும் வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. மேலும் மலைக்காய்கறி தோட்டங்களில்உள்ள கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்ற பயிர்களை பகல் மற்றும் இரவு நேரங்களில் மேய்ந்து செல்வதால், விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இதில் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் அதனையும் மீறி விலங்குகள் தோட்டத்தினுள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.    இந்நிலையில் குன்னூர் முட்டிநாடு அருகேயுள்ள செலவிப்நகர் பகுதியில் ஏராளமான மலைக்காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது வேலிகள் அமைத்து பயிர்களை காக்கும் நடவடிக்கையில் அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்