×

தாமதமாகும் சாலை பணி

பந்தலூர், மார்ச் 19: பந்தலூர் அருகே தார் இன்றி சாலை பணி தாமதமாவததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பந்தலூர் அருகே உள்ள பொன்னானி-அம்மங்காவு வரை சுமார் 1.6 கி.மீ., தூரமுள்ள தார்சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இதனை சீரமைத்து தர ேவண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம்  ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது. ஆனால் இதுவரை தார்சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் கேட்டப்போது, ‘‘சாலை அமைக்க தேவையான தார் இல்லாததால் பணிகள் நடக்க தாமதம் ஏற்படுகிறது. தற்போது மக்களைவை தேர்தல் நடக்க உள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது.   தார்சாலை பணி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’’ என்றார். இந்நிலையில் தொ டர்ந்து மழைக்காலம் தொடங்குவதற்குள் தார்சாலைப்பணியை முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி