×

வனத்தில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை

மஞ்சூர், மார்ச் 19: வனப்பகுதியில் வேண்டும் என்றே தீ வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.   நீலகிரி மாவட்டம் தெற்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட குந்தா சரக பகுதிகளில் வன விலங்குகள், விலை உயர்ந்த மரங்கள், மூலிகை தாவரங்கள், புல் வெளிகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தற்போது இப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு நீர், நிலைகள் வறண்டு உள்ளது. மேலும் வறட்சி மற்றும் வெயில் தாக்கம் காரணமாக மரங்கள், செடி, கொடிகள், மூலிகை தாவரங்கள், புல் வெளிகள் வேகமாக கருகி வருகிறது.    இந்நிலையில் காட்டு தீ பரவலை தடுக்க குந்தா வனத்துறையின் சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குந்தா ரேஞ்சர் சரவணன் கூறியதாவது: குந்தா சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் தற்போது வறட்சி நிலவி வருகிறது. வறட்சியால் காட்டு தீ பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வனப்பகுதிகளில் விறகு சேகரிப்பது, வனத்துறையின் அனுமதி இல்லாமல் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி அடுப்பு மூட்டுவது, சமைப்பது போன்ற செயல்களில் ஈடுபடகூடாது.   இதேபோல் பீடி, சிகரெட்டுகளை பற்றவைத்து வனப்பகுதிகளில் வீச கூடாது. வனப்பகுதிகளில் வேண்டுமென்றே தீ வைப்பவர்கள் மீது வனச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Tags : forest ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...