×

கோவை ஐந்துமுக்கு பகுதியில் பழுதடைந்த போக்குவரத்து சிக்னல்கள்

கோவை மார்ச்.19;கோவை டவுன்ஹாலில் ஐந்துமுக்கு சாலையில் உள்ள சிக்னல் விளக்குகள் நீண்ட நாட்களாக பழுதடைந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை டவுன்ஹால் ஐந்துமுக்கு சாலை மாநகரில் உள்ள முக்கியமா சாலையாகும். டவுன்ஹால் பகுதி என்பதால் துணி கடைகள். மாளிகை கடைகள், காய்கறி கடைகள்,  வாகனங்களின் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் போன்று மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் இடமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலைகள் மிக குறுகியதாகவும் நெரிசல் ஆகவும் உள்ளது. அப்பகுதியில் இருக்கும் ஐந்துமுக்கு சாலையில் சிக்னல் விளக்குகள் பழுதடைந்துள்ளது. அச்சாலையில் சில நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் இருப்பதில்லை. இதனால் வாகன  ஓட்டிகள் தங்கள் விருப்பத்திற்கு, சாலை விதிகளை மீறி வாகனத்தை ஓடிச் செல்வதால் விபத்துகளும், நடைபாதையில் மக்கள் சாலைகளை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.இப்பகுதியில் பழுதடைந்த சிக்னல் விளக்குகளை சீரமைத்து, எந்நேரமும் போக்குவரத்து போலீஸ் பணியில் இருக்குமாறு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Tags : area ,Coimbatore ,
× RELATED வாட்டி வதைக்கும்...