×

பாஜ., கூட்டத்திற்கு அதிமுக அமைச்சர்கள் வருகை

ஈரோடு,  மார்ச் 19:  ஈரோட்டில் நடைபெற்ற பாஜ., நிர்வாகிகள் கூட்டத்திற்கு அதிமுக  ஈரோடு தொகுதி வேட்பாளர் மற்றும் அமைச்சர்கள் வருகையால் பாஜ.,வினர்  ஏராளமானோர் வெளிநடப்பு செய்தனர்.  ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியின்  சார்பில் ஈரோடு உட்பட 6 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த  கூட்டத்திற்கு அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தலைமை  வகித்தார். இந்த கூட்டத்தின் இடையில் அதிமுக ஈரோடு மக்களவை தொகுதி  வேட்பாளர் வெங்கு என்ற மணிமாறன் வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு  வெளியான சில நிமிடங்களிலேயே பாஜ.,வினர் பெரும்பாலனோர் கூட்டத்தில் இருந்து  வெளிநடப்பு செய்தனர். இதனால் அறையில் வேறும்  100க்கும் குறைவானவர்களே அமர்ந்திருந்தனர். இதற்கிடையில் தமிழக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  கருப்பணன் ஆகியோர் தலைமையில் அதிமுக ஈரோடு தொகுதி வேட்பாளர் வெங்கு  மணிமாறன் கூட்டத்திற்கு வந்தார். அவருக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்  இல கணேசன் சால்வை அணிவித்தார்.

Tags : meeting ,ministers ,AIADMK ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால்...