×

திருப்பூர் தொகுதி இ.கம்யூ., வேட்பாளர் திமுக கூட்டணி நிர்வாகிகளை சந்தித்தார்

அந்தியூர், மார்ச் 19: அந்தியூரில் திமுக பேரூர் கழக பொறுப்பாளர் காளிதாஸ் வீட்டில் திருப்பூர் மக்களவை தொகுதி வேட்பாளர் சுப்பராயன் கூட்டணி கட்சியினரை சந்திக்கும் கூட்டம் நடந்தது.திமுக மாவட்டச் செயலாளர் நல்லசிவம் தலைமையில் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் முன்னிலையில்  நடந்த கூட்டத்தில், இதில் மாவட்டத் துணைச் செயலாளர் அறிவானந்தம், அவைத் தலைவர் காளிமுத்து, திமுக பேரூர் கழக பொறுப்பாளர் காளிதாஸ், பேரூர் கழக துணைச் செயலாளர் சாக்கு  பழனிச்சாமி, சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் சோபியா ஷேக், துணை அமைப்பாளர் செபஸ்தியான், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மகாலிங்கம், முன்னாள் எம்எல்ஏ குருசாமி, அத்தாணி பேரூர் கழக செயலாளர் செந்தில்கணேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வைத்தியலிங்கம், பேரூர் கழக  இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் சம்பத்குமார், சுப்பிரமணி மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.
பவானி:   திருப்பூர் இ.கம்யூ.,வேட்பாளர் பவானியில் நடந்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் சுப்பராயன் பேசியதாவது: பவானி கைத்தறி நெசவாளர்களின் உயிர்நாடியாக விளங்கும் ஊராகும். இங்கு, ஜமக்காள உற்பத்தி முடங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் கைத்தறி தொழிலை பாதுகாக்க எவ்வித முயற்சியும் செய்யவில்லை. மத்திய, மாநில அரசுகள் இணைந்து வேலைவாய்ப்பு அதிகம் வழங்கக்கூடிய இத்தொழிலுக்கு முழுச் செலவை ஏற்று பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் மட்டுமே தீர்வு ஏற்படும். இத்தொழிலை காக்க திமுக தலைமையலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போராடும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய பவானி அரசு மருத்துவமனை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இவ்வாறு சுப்பராயன் பேசினார். திமுக மாவட்டச் செயலாளர் நல்லசிவம், நகரச் செயலாளர் நாகராஜன், ஒன்றியச் செயலாளர் துரைராஜ், சிபிஐ நகரச் செயலாளர் பாலமுருகன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் மாணிக்கம், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சிறுத்தை வள்ளுவன், தமுமுக மாவட்டச் செயலாளர் முஹம்மது உள்ளிட்ட பலர் பங்ேகற்றனர்.

Tags : constituency ,Tirupur ,candidate ,EC ,DMK ,executives ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...