குடிநீர் விநியோகம் கேட்டு பேரூராட்சி வாகனத்தை சிறைபிடித்து மறியல்

ஓமலூர், மார்ச் 19:  ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பேரூராட்சி வாகனத்தை பெண்கள் சிறை பிடித்து, காலிகுடங்களுடன்  மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இந்நிலையில், ஓமலூர் பேரூராட்சி 9வது வார்டு நேரு நகரில், கடந்த 6 மாதமாக குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படவில்லை. மேலும், போர்வெல் தண்ணீரும் வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை அந்த வழியாக சென்ற பேரூராட்சி குப்பை வாகனங்களை சிறைபிடித்து, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிகுடங்களுடன் போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் அசோக்குமார், சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது, அவரை பெண்கள் முற்றுகையிட்டு, சீரான குடிநீர் வழங்காவிட்டால் வாகனத்தை விடுவிக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து, குடிநீர் வழங்கவும், பழுதடைந்த போர்வெல்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதன் பேரில், ேபாராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், அப்பகுதியில் சுமார் 3 மணி ேநரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காடையாம்பட்டி: காடையாம்பட்டி தாலுகா கூகுட்டப்பட்டி ஊராட்சி மோளகரட்டூர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 6மாதமாக இப்பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், நேற்று குடிநீர் கேட்டு காடையாம்பட்டி ஊரட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர் பெண்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: