முகிலன் மாயமான வழக்கு சேலம் சமூக ஆர்வலருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

சேலம், மார்ச் 19: முகிலன் மாயமானது குறித்து விசாரணை நடத்த, சேலம் சமூக ஆர்வலருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் முகிலன். சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த வன்முறை தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அதன்பின்னர் முகிலன் திடீரென மாயமானார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடைய முகிலன் மாயமானது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி தலைவருமான பூமொழி, விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பால்ராஜ், இதற்கான சம்மனை வழங்கினார். சேலம் சூரமங்கலத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், டிஎஸ்பி கிருஷ்ணன், இன்று காலை முகிலன் மாயமானது குறித்து பூமொழியிடம் விசாரணை நடத்துகிறார்.

Related Stories: