அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 49 பேர் மீது வழக்கு

ஆத்தூர், மார்ச் 19: சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரி பெண்கள் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகி மேரி தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதை மீறி மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பொன்னுசாமி, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆத்தூர் போலீசார் மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் 24 மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.   ஜலகண்டாபுரம் :  ஜலகண்டாபுரம் பஸ் ஸ்டாப் அருகே, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனிடையே, தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், துணை செயலாளர் கிருஷ்ணன், நடராஜன், சின்னதம்பி, அருணாச்சலம், சிவக்குமார், கோவிந்தராஜ், கேசவன் உள்ளிட்ட 25 பேர் மீது ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: