இளம்பிள்ளை ஏரியை தூர்வாரும் பணி

இளம்பிள்ளை, மார்ச் 19: இளம்பிள்ைள ஏரியை தூர்வாரும் பணியை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

இளம்பிள்ளை சந்தைபேட்டை பகுதியில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில், இளம்பிள்ளை ஏரி உள்ளது. இந்த ஏரி நீண்ட ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. பொதுமக்கள் கோரிக்கையின் பேரில், கடந்த 2016ம் ஆண்டு திரவ கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ₹2.36கோடி மதிப்பீட்டில் ஏரியை தூய்மைபடுத்தி, அதன் மூலம் மின்சாரம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு 115 தொட்டிகள் அமைக்கப்பட்டது. அதன் மூலம் கழிவுநீரை சுத்தப்படுத்தம் பணிகள் நடைபெற்று வந்தன. தற்சமயம், 90 தொட்டிகளே கட்டப்பட்டு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. டெண்டர் பணி காலம் முடிந்தும், பணிகள் முழுமை அடையவில்லை. இந்நிலையில் இளம்பிள்ளை ஏரியை தூய்மைப்படுத்தும் பணியை, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, பேரூராட்சி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் பிரபாகரன், இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) ராஜவிஜயகணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: