×

கால்நடைகளுக்கு கோமாரி ேநாய் தடுப்பூசி முகாம்

காடையாம்பட்டி,மார்ச்19: சேலம் மாவட்டம்  காடையாம்பட்டி துப்பிபாடி கிராமத்தில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் கால்நடைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டு சென்றனர். இதுகுறித்து, கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், எத்தனை மாத சினையாக இருந்தாலும், 3 மாத கன்றுக்குட்டியாக இருந்தாலும், கால்நடைக்கு கோமாரி நோய் தாக்குதல் ஏற்படுகிறது. இதனை தடுக்க அந்தந்த பகுதியில் நடத்தப்படும் கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் கால்நடைகளை விவசாயிகள் அழைத்து சென்று தடுப்பூசி போட வேண்டும் என்றும், மேலும் கோமாரி நோய் தாக்குதல் குறித்து விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags : Komari disease vaccine camp ,
× RELATED ராமானுஜபுரத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்