சேலம் சிறுமலர் பள்ளியில் நீட் பயிற்சி நாளை தொடக்கம்

சேலம், மார்ச் 19: சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில், ஆகாஷ் எக்சல் மற்றும் நாமக்கல் கிருஷ்ணா (நீட்) அகாடமி இணைந்து நடத்தும், நீட் பயிற்சி நாளை (20ம் தேதி) தொடங்கி, மே 2ம் தேதி வரை 42 நாட்களுக்கு தொடர்ந்து நடக்கிறது. இதில், பிளஸ்2 தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் சேர்ந்து பயன்பெறலாம். கடந்த ஆண்டு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் அதிக மாணவர்களை, நீட் தேர்வில் தேர்ச்சி பெறச்செய்து 350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, இந்தியாவில் பல்வேறு மருத்துவ கல்லூரிகளுக்கு இடம் பிடித்துள்ளனர். தமிழ் வழியில் பயின்ற காவியா மற்றும் செல்வி என்ற மாணவிகள், தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியிலும் கலைச்செல்வி என்ற மாணவி சென்னை முத்துகுமரன் மருத்துவ கல்லூரியிலும் பயின்று வருகின்றனர்.

மேலும், ஆங்கில வழியில் பயின்ற 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இம்மையத்தில் சிபிஎஸ்இ பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் ஐதராபாத்தில் இருந்து உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கு, 25 வருட அனுபவமிக்க ஆசிரியர்களால் தமிழாக்கம் செய்து, தமிழ்வழி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு, கோடை விடுமுறையில் வரும் 24ம் தேதி முதல் பயிற்சி தொடங்க உள்ளது. தனித்தனி வகுப்பறைகள் மற்றும் பஸ் வசதி, தனித்தனி விடுதி வசதி உண்டு. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இப்பயிற்சியில் சேர்த்து பயன் பெறலாம் என நிறுவன இயக்குநர் அர்த்தனாரி தெரிவித்துள்ளார்.

Related Stories: