ஆத்தூர் பகுதியில் வெயிலில் காய வைக்கப்படும் ஜவ்வரிசி

ஆத்தூர், மார்ச் 19: ஆத்தூர் பகுதியில் ஏராளமான ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் கடந்த சில ஆண்டுகளாக ஜவ்வரிசியை உலர வைக்க உலர் இயந்திரத்தினை பயன்படுத்தி வந்தனர். தற்போது ஆத்தூர் பகுதியில் கடும் வெயில், அனல் காற்றுடன் வீசுவதால் தற்போது சேகோ ஆலை உரிமையாளர்கள், ஜவ்வரிசிகளை உலர வைக்க இயற்கையான வெயிலை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதற்காக ஆலைகளில் உள்ள உலர்களங்களில் ஜவ்வரிசிகளை காய வைக்கவும், அதனை செய்ய ஆட்களை நியமித்தும் உலர்த்துகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கடந்த காலங்களில் சரியான வானிலை தென்படவில்லை. இதனால் உலர் இயந்திரனை பயன்படுத்தி வந்தோம். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இயற்கையான முறையில் ஜவ்வரிசியை உலர வைப்பதால், வெண்மையும் சத்தும் உள்ளதால், தற்போது உலர வைத்து வருகிறோம்,’ என்றனர்.

Related Stories: