×

திருச்செங்கோட்டில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருச்செங்கோடு, மார்ச் 19: திருச்செங்கோட்டில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நடந்த விழிப்புணர்வு பேரணியில், மகளிர் சுய உதவி  குழுவினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, மகளிர் சுய உதவிக் குழுவினர் மனித சங்கிலி அமைத்து வாக்களிக்கும் அவசியம் குறித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வாக்களிக்கும் அவசியம் குறித்த தட்டிகளை ஏந்தி சென்றனர். இது குறித்து ஆர்டிஓ மணிராஜ் கூறுகையில், திருச்செங்கோட்டில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. வாக்களிக்கும் அவசியம் குறித்து  கோலங்கள், மனிதசங்கிலி, கல்லூரி மாணவர்கள் பேரணி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நகராட்சி வளாகத்தில் இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரங்களின் பயன்பாடு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது என்றார். நிகழ்ச்சிகளில் தாசில்தார் கதிர்வேல், தேர்தல் துணை தாசில்தார் கார்த்திகேயன், நாமக்கல் மகளிர் திட்ட அலுவலர் மணி, ஒருங்கிணைப்பாளர் ரெட்கிராஸ் ராஜேஷ்கண்ணா, சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் ராஜா மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்