×

கூலி உயர்வு எதிரொலி பள்ளிபாளையத்தில் லுங்கி மீட்டருக்கு ₹2 உயர்வு

பள்ளிபாளையம், மார்ச் 19: விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக பள்ளிபாளையத்தில் ஒரு மீட்டர் லுங்கிக்கு ₹2 விலை உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளிபாளையத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியில், லுங்கிகள் அதிகளவில் நெய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் லுங்கிகள் கேரளாவுக்கு பெருமளவு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஒரு லுங்கிக்கு 2 மீட்டர் துணி தேவைப்படும். கெட்டியாக நெய்யப்படும் லுங்கிகள் 1 மீட்டர் ₹30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த லுங்கிக்கான விலை தொடர்பாக, நேற்று ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்தது. சங்க நிர்வாகிகள் ஜப்பான் சண்முகம், வாத்தியார் பாலசுப்பிரமணியம், ஆயக்காட்டூர் கணேஷ், அண்ணாநகர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 சதம் கூலி உயர்த்தப்பட்டுள்ளதால், லுங்கியின் விலையை மீட்டருக்கு ₹2 உயர்த்தி விற்பதென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 2 மீட்டர் கொண்ட ஒரு லுங்கி 60 ரூபாயிலிருந்து 64 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தியாளர்கள் அனைவரும் சங்கத்தின் முடிவை ஏற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Elevation hike ,Pallipalayam ,Lungi ,
× RELATED நீர்மோர் பந்தல் திறப்பு