×

நாமக்கல்லில் கொமதேக வேட்பாளர் அறிமுக கூட்டம்

நாமக்கல், மார்ச் 19: நாமக்கல்லில் நகர திமுக கூட்டம், நேற்று நகர பொறுப்பாளர் ஆனந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் சின்ராஜை அறிமுகப்படுத்தி பேசினர். கூட்டத்தில், திமுக கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, கட்சி நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் ராணி, நக்கீரன், டாக்டர் மாயவன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செல்வமணி, பால்ரவி, கந்தசாமி, ரவிசந்திரன், மணி, ஆனந்தன், ஆனந்த், ரமேஷ், மனோகரன், அன்பரசு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,nominee ,Namakkal ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...