×

புதிய அணை கட்டினால் ஓட்டு

பாலக்கோடு  மார்ச் 19: பாலக்கோடு அருகே கூட்டாறு மற்றும் தொல்லைகாது என்னும் இடத்தில் புதிய அணை கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலக்கோடு பகுதி மக்களின் முதன்மை தொழில் விவசாயமாகும்.  இப்பகுதியில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் கரும்பு, வாழை, தென்னை, பாக்கு,  மாமரங்கள் மற்றும் காய்கறிகள், பழங்கள் என உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.  கடந்த 10 ஆண்டுகளாக பருவமழை குறைவால்  அணைகள், ஏரிகள், கிணறுகள் என வறண்டு  காணப்படுகின்றது. நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றதால் விவசாயம்  முற்றிலும் பொய்து போனது. இந்நிலையில் கிராமத்தில் உள்ள விவசாயிகள்  பிழைப்பு தேடி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும்  அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டிராக்டர் தண்ணீரை விலைக்கு ₹900 வரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

 கடும் வறட்சியினால் தண்ணீரியின்றி வன விலங்குள் ஊருக்குள் வருவது  தொடர்கதையாக உள்ளது. இதனால் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான  கூட்டாறில் புதிய அணை, தொல்லைகாது அணை என இரண்டு புதிய நீர்பாசன  திட்டத்தை நிறைவேற்றினால் சுமார் 5டிஎம்சி தண்ணீர் வரை சேமிக்க வைக்க முடியும். இத்திட்டத்தின்  மூலம் பேவுஅள்ளி ஊராட்சி, பிக்கிலி ஊராட்சி, எர்ரணஅள்ளி ஊராட்சி  மக்கள் பயன் பெறலாம். மேலும்  விவசாயத்தையே நம்பியை உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் “தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுக்கே எங்கள் வாக்கு” என்ற முழக்கத்தை  வைத்துள்ளனர்.

Tags : dam ,
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்